×

பர்கர் பீட்ஸா மூலம் என்ன பாதிப்பு  தெரியுமா ?

 

பொதுவாக நமக்கு எந்த உணவை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லை .உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறையில்லாதோர் எதை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் உண்ணலாம் ,ஆனால் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த உணவை எப்போது உண்ணலாம் என்று பார்க்கலாம் 

1.சிலர் மதிய நேரத்தில் சூப் போன்ற உணவுகளை சாப்பிடுவர் ,அவற்றை தவிர்க்க வேண்டும். காரணம் இந்த வகை உணவுகள் சாப்பிட்ட உடனேயே பசி அதிகரிக்கும்.  
2.இதனால் நாம் அதிகம் உணவை சாப்பிடுவதால்  அது உடல் பருமனை தான் உண்டாக்கும்.
3.சிலர் வெறும் ஜுஸை மதிய வேளையில் குடிப்பர் ,ஆனால் அது மட்டும் சாப்பிடக்கூடாது. 
4.ஜூஸானது மிக விரைவாக பசியை உண்டாக்கி வறுத்த, பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டி நம் ஆரோக்கியத்தை கெடுத்து விடும் 
5.சிலர் சுவையாக உள்ளதே என்பதற்காக பாஸ்தா, நூடுல்ஸ் முதலியவற்றை மதிய நேரத்தில் உண்பர் .ஆனால் அதை சாப்பிட்டால் அது  உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து விடும். 
6.இவற்றில் உள்ள அதிக அளவிலான கார்ப்ஸ் உங்கள் உடல் நலத்தை பாதித்து எடையை அதிகரிக்க செய்துவிடும்.
7. சிலர் பர்கர், பீட்சா போன்ற உணவுகள் மதிய நேரத்தில் உண்பர் ,இதை சாப்பிட்டால் கொழுப்பு சத்துக்கள் அதிகளவில் சேரும். 
8.இந்த பர்கர் பீட்ஸா மூலம்  உடல் பருமன் அதிகரிக்கும். 
9.இந்த பர்கர் பீட்ஸா  மலச்சிக்கலையும்  உண்டாக்கும்.