×

ஐஸ் வாட்டர் மூலம் உண்டாகும் நோய்கள் பட்டியல் 

 

பொதுவாக குடிநீரை எப்போதுமே நம் உடல் வெப்ப நிலைக்கு ஏற்றவாறு குடித்து வந்தால் நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் .ஆனால் பலர் வெயில் நேரத்தில் வெளியே சென்று விட்டு வந்து ஜில்லென்று ஐஸ் வாட்டர் குடிப்பதுண்டு இதனால் நம் உடலின் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது ,மேலும் ஐஸ் வாட்டர் மூலம் நம் உடலுக்கு உண்டாகும் கேடுகள் பற்றி இந்த ப்பதிவில் பாக்கலாம் .

1.ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவது தடை படும் . 
2.எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்குவதால் செரிமானம் பாதிக்கும் . . 
3.இப்படி ஐஸ் வாட்டர் மூலம்  உணவுகளில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற முடியாமல் போய்விடும்.
4.பொதுவாக நம் உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். 
5.ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில் குடிநீரை  பருகினால், அந்த வெப்பநிலைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்படும். 
6.இப்படி ஆற்றலானது உண்ணும் உணவை செரிக்க பயன்படாமல், உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்த படும் .இதனால் , உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்ச முடியாமல், நாளடைவில் இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
7.குளிர்ச்சியான நீரைப் பருகும் போது, சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும். 
8.இப்படி ஐஸ் தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால், அந்த சவ்வு மிகுதியாக பாதிக்கப்பட்டு, அதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டு, தொண்டையில் புண் உருவாகும்.
9.ஐஸ் தண்ணீரைப் பருகினால், இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும் 
ஆய்வுகளிலும், ஐஸ் தண்ணீரைக் குடித்தால், சஞ்சாரி நரம்பு தூண்டப்படும் என்று கூறப்படுகிறது  
10.இந்த நரம்பு தான் உடலின் தன்னிச்சையற்ற செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. 
11.குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இந்த நரம்பு இதயத்துடிப்பை குறையச் செய்வதால் நம் ஆரோக்கியம் பாதிக்கும்