×

அடிக்கடி விரதம் இருந்தால் என்னென்ன பாதிப்பு ஏற்படும் தெரியுமா? 

 


அடிக்கடி எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்போருக்கு உடலில் புரத சத்து குறைபாடு ஏற்படும் .
 எனவே, புரதச்சத்து குறையும் போது பலவிதமான அது உடலில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

புரதச்சத்து குறைப்பாட்டால்  கல்லீரல் வீக்கம் அல்லது கல்லீரல் செயலிழப்பு போன்ற தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த கல்லீரல் பிரச்சினைக்கு சத்து குறைவு மட்டுமல்லாமல் உடல் எடை அதிகமாக உள்ளவர்களும், அதிகமாக மது குடிப்பவர்களுக்கும்  அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தை களுக்கு தோல் ,நகம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும் 


 புரத சத்துக்குறைபாட்டின் முக்கிய அறிகுறி பசியின்மை யாகும் .ஆனால் அதன் , துவக்க அறிகுறி அதற்கு எதிர்நிலையில் இருக்கும். உடலில் புரதச்சத்து குறைந்ததுமே, அதனை அடைவதற்காக ஹார்மோன்கள் தூண்டப்பட்டவுடன் எந்நேரமும் எதையாவது கொரித்துக்கொண்டேயிருக்க தோன்றும் 
புரதச்சத்து குறைபாடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை  குறைத்து விடுவதால் ,அடிக்கடி உடல்  நல கோளாறு ஏற்படும் 

உடலில் புரதம் குறைந்து விட்டால் அது எலும்பையும் பாதிப்பதால் ,அடிக்கடி எலும்பு முறிவு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கும் 

மேலும், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதால்  எடிமா போன்ற நோய்களும் ,உடலில் வீக்கம் ,எந்நேரமும் சோர்வு ,களைப்பு ,எதிலும் உற்சாகமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றி பாடாய் படுத்துவதால் சத்தான உணவினை சாப்பிட்டு உடலில் புரதம் குறையாமல் காப்போம்