×

உடல் எடை கூடினால் எந்தெந்த நோய்கள் உங்களை கூப்பிடும் தெரியுமா ?

 

பொதுவாக ஒருவருக்கு உடல் எடை கூடுவதற்கு உடலுழைப்பு இல்லாமை மற்றும் அதிக கலோரிகள் உள்ள உணவு எடுத்து கொள்வது என்றாலும் ,தூக்கமின்மை பிரச்சினையும் ஒரு காரணம் என்று கண்டறியபட்டுள்ளது .அதிகம் தூங்காமலிருப்பதால் அவர்களின் எடை கூடி விடுகிறது .

இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது: தூக்கமின்றி சோர்வாக இருக்கும்போது அதிகமாக உணவு உட்கொண்டு விடுவார்கள் என்று கண்டறியப்பட்டுஉள்ளது

உடல் எடை பல இதய நோய்களுக்கான காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. BMI அதிகரிக்கும் போது, இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, இரத்த சர்க்கரை மற்றும் உடல் வீக்கம் அதிகரிக்கிறது. இந்த மாற்றங்கள் கரோனரி இதய நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன.

உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்

உடல் பருமன் அதிகமாக இருந்தால் சிறுநீரக செயல்பாடும் பாதிக்கப்படும். சிறுநீரகங்கள் கூடுதல் வேலை செய்ய வேண்டி வரும்..

உடல் பருமன் ஆஸ்துமா அபாயத்தையும் அதிகரிக்கும். அதிகப்படியான கொழுப்பு நுரையீரலைத் தூண்டி ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும்.