×

எப்படி சாப்பிட்டால் டைப்-2 நீரிழிவு நோய் வராது தெரியுமா ?

 

பொதுவாக பல நட்சத்திர ஹோட்டல்களில் உணவை ஸ்பூனால் சாப்பிடுகின்றனர் .மேல் நாட்டிலும் இப்படி உணவை ஸ்பூனால் சாப்பிடுகின்றனர் .ஆனால் உணவை  கைகளால் சாப்பிடுவதில்தான் ஆரோக்கியம் உள்ளது 
கையால் உணவைசாப்பிடும் போது, கைகளின் விரல்களில் இருக்கும் ஐந்து கூறுகளும் தூண்டப்பட்டு, நீங்கள் சாப்பிட வேண்டிய உணவை உற்சாகத்துடன் சாப்பிட உதவுகிறது.இப்பதிவில் அது பற்றி நாம் பார்க்கலாம் 

1.உணவை ஸ்பூனால் சாப்பிடுவதை விட கைகளால் சாப்பிடுவது வித்தியாசமான சுவையையும் மகிழ்ச்சியையும் தரும் 
2.நாம் உணவை ஸ்பூனால் சாப்பிடுவதை விட கைகளால் உணவை உண்பதன் மூலம், வயிற்றில் உள்ள செரிமானம் சிறப்பாக இருக்கும் , 
3.உணவை கைகளால் சாப்பிடுவதில் உணவும் எளிதில் ஜீரணமாகும். மேலும் உணவை ரசித்து ருசித்து உண்பதற்கும் வைக்கும்.
4.ஆயுர்வேதத்தின் படி, ஸ்பூனால் சாப்பிடுவதை விட கையால் உணவை உண்பவர்களுக்கு விரைவில் பசி ஏற்படாது. 
5.கைகளால் உணவு உண்பதால் வயிறு எளிதில் நிறைவதால் பசி குறைவாய் இருக்கும் . 
6.இதனால், உங்களுக்கு, மதிய உணவுக்குப் பிறகு இரவு வரை பசி குறைவாய் இருப்பதால் எடை குறைய வாய்ப்புள்ளது . 
7.உணவை கைகளால் சாப்பிடுவதில்எடையைக் குறைக்க உதவினாலும் , உணவு உண்பதற்கு முன் கைகளை நன்றாகக் கழுவுவது மிகவும் அவசியம்.
 8.ஸ்பூன் மூலம் நம்முடைய உணவை விரைவாக சாப்பிடுகிறோம். இது சர்க்கரையின் சமநிலையை சீர்குலைத்து, நீரிழிவு டைப்-2 அபாயத்தை ஏற்படுத்துவதாக பல நிபுணர்கள் கூறுகின்றனர் .
9.,அது மட்டுமல்லாமல் டைப்-2 நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் ஸ்பூன் ஃபோர்க் சாப்பிடுபவர்கள் என்றும் கூருகின்றனர் .
10.உணவை கைகளால் சாப்பிடுவதில் பல நன்மை உள்ளது .உணவு உண்ணும் போது விரல்கள் மற்றும் கட்டை விரலை இணைக்கும்போது, நமக்குள் ஒரு ஆற்றல் உருவாகி,, இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்