×

தினம் ஐந்து உலர் திராட்சை சாப்பிட்டா ,எந்தெந்த  நோயிடம் அஞ்சாமல் வாழலாம் தெரியுமா ? 

 

மலிவாக கிடைக்கும்  உலர் திராட்சையில் ஏராளமான ஆற்றலும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் ,
அதை  தினமும் இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை என்னவென்று தெரிந்தால் ஆச்சரிய படுவதோடல்லாமல் அதை உடனே வாங்கி சாப்பிட விரைவீர்கள் .


1. உலர் திராட்சை கண்களுக்கு நல்லது செய்யும் ஆற்றல் உள்ளதா .அதில் மாகுலர் தசை சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது . அந்த பலன்கள் கிடைக்க  இரவில் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழு பலனும் கிடைக்கும் 

2. உலர் திராட்சை மனித உடலின் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதனால்  இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பெரிதும் உதவி புரிகின்றது  

3.  உலர் திராட்சை மனிதனின் குடல் இயக்கத்தை எளிதாக்க உதவி புரியும் ஆற்றல் உள்ளது . இதனால் இதை சாப்பிடுவதால் மல சிக்கல் பிரச்சினை தீரும் 

4. உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், கால்சியம் சத்துக்கள் எலும்புகளுக்கு கிடைத்து ,எலும்புகளை வலிமையாக்குகிறது 

5.உலர் திராட்சையை தினமும் இரவு தூங்கும் போது சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி .நீரிழிவு நோயிலிருந்து காக்கிறது  .அதிக பசியை தடுத்து ஆரோக்கியம் தருகிறது  .