×

தம்பதிகளின் திருமண வாழ்வை நரகமாக்கும் சில நோய்கள் 

 

இல்லற வாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு அடையாளம் ஒருவரோடொருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இனைந்து வாழ்வதுதான் .ஆனால் இந்த இல்லற வாழ்வை சில நோய்கள் குலைத்து விடும் .இருவரில் யாருக்காவது பின் வரும் நோயில் ஏதாவது ஒன்று இருந்தாலும் இல் வாழ்வில் நிம்மதியிருக்காது .அதனால் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளுங்கள் 

திருமண வாழ்க்கையை பாதிக்கும் நோய்கள் 

சர்க்கரை நோய் :

கணவன் அல்லது மனைவி இருவரில் யாருக்காவது சர்க்கரை நோயிருந்தால் இல் வாழ்க்கை நிம்மதி இருக்காது .ஏனெனில் ஆண்களுக்கு சர்க்கரை நோயிருந்து ,அது கட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்திருந்தால் அவருக்கு பாலியல் உறவில் நாட்டமிருக்காது .பல்வேறு பாதிப்புகளை உண்டாகி தாம்பத்ய வாழ்வை சீர் குலைக்கும் .
அது போல் மனைவி சுகர் பேஷண்டாக இருந்து ,சுகர் அளவு உயர்ந்திருந்தாலும் அவருக்கு பாலியல் வாழ்வில் நாட்ட மிருக்காது .அதனால் மருத்துவரிடம் சென்றுஉரிய  சிகிச்சை  எடுத்து கொண்டு சுகர் அளவை  கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் 

இருதய நோய்

இதயம் தொடர்பான ஏதேனும் நோய்  கணவருக்கோ ,மனைவிக்கோ இருந்தால் அது  இரத்த நாளங்களையும் சேதப்படுத்தி ,பாலியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.மேலும் பிபி க்கு மாத்திரை சாப்பிடுவோர் அதன் காரணமாக அதன் பக்க விளைவு காரணமாக பாலியல் உறவில் பிரச்சினை ஏற்படலாம் .மேலும் இதய நோயாளிக்குண்டாகும் உயிர் பயம் காரணமாகவும் இந்த பாலியல் பிரச்சினை ஏற்படலாம் 
மன அழுத்தம்

மன அழுத்தம் ,மன சோர்வு போன்ற நோய்கள் இருப்போரின்  வாழ்வில் இன்பமருக்காது  .அதனால் எந்நேரமும் விரக்தி மனதுடன் இருப்போர் உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபடலாம்