×

உணவு சாப்பிட்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் எந்த நோயை வரவைக்கும் தெரியுமா ?

 

பொதுவாக நம் முன்னோர்கள் சாப்பிட்டதும் சிலவற்றை செய்ய கூடாது என்றும் ,சிலவற்றை செய்யலாம் என்றும் பட்டியல் போட்டு நோயின்றி வாழ்ந்து வந்தனர் .ஆனால் இப்போது எல்லாமே தலைக்கீழாய் போனதால் ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருக்கிறோம் .சாப்பிட்டதும் என்னென்னெ செய்யக்கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு .அதிலும் உணவு சாப்பிட்டவுடன் புகை பிடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. 
2.இப்படி சாப்பிட்டவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட்,  10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான பாதிப்பை ஏற்படுத்தும் ..  
3.இப்படி உணவு உண்டதும் தம் அடிப்பதால்  புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகரிக்கிறது. 
4.சிலர் சாப்பிட்டதும் பெல்ட்டை தளர்த்துவர் .இப்படி சாப்பிட்ட பிறகு  பெல்ட்டை  தளர்த்தினால் , செரிமானக் கோளாறு ஏற்படும்.
5.சிலர் சாப்பிட்ட உடனே நடப்பர் ,இப்படி நடந்தால்  சத்தான உணவுகளை சாப்பிட்டாலும் சரியான சத்துகள் நம் உடலுக்கு கிடைக்காது. 
6.சிலர் சாப்பிட்டவுடன் தூங்க செல்வர் ,இப்படி தூங்க சென்றால் அது உடலுக்கு கேடு தரும் 
7.சாப்பிட்டவுடன் தூங்க சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. 
8.சாப்பிட்டவுடன் தூங்க சென்றால் வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயு உற்பத்தியாகும்  
9.சாப்பிட்டவுடன் தூங்க சென்றால் நோய்க் கிருமிகளும் வர வழிவகுக்கும்.