×

பரவும் டெங்குக்கு சங்கூதும் வழிகள்

 

மழைக்காலங்களில் கொசு தொல்லையுடன் டெங்கு காய்ச்சலும் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இப்போது நாடு முழுவதும் பரவி வருகிறது .இது ஆரம்பத்தில் லேசான காய்ச்சலுடன் தொடங்குகிறது .பின்னர் கடுமையான உடல் வலி ,தசை வலி போன்றவற்றை உண்டு பண்ணுகிறது .மேலும் சரியான ஓய்வு மற்றும் மருந்துகள் மூலம் அறிகுறிகளை பெருமளவு குறைக்க முடியும்.இம்மியூனிட்டி பவர் குறைவாக உள்ளவர்கள் ,குழந்தைகள் மற்றும் முதியோர் இந்த டெங்குவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்

அந்தவகையில் டெங்கு காய்ச்சலில் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் நாம் கொசுவலையோ அல்லது பேன் அருகே உட்காந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

மேலும் வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொண்டால் டெங்குவை கட்டுபடுத்தலாம்  

குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?

ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக்கரைசல்

இளநீர்

பழச்சாறுகள்

பால்

கஞ்சி

திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.  மேற்கண்ட வழிமுறைகளையும் ,மருத்துவர் கொடுக்கும் மருந்துகளையும் முறையாக எடுத்து கொண்டால் டெங்குவை ஒழிக்கலாம்