×

இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் இந்த கஷாயம் கொடுங்க 

 

பொதுவாக  துளசியுடன் சில பொருட்களை சேர்த்து குடித்து வந்தால் எந்த நோய்களை குணப்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து விட்டு அதில் குளித்தால் உடலின் வியர்வை நாற்றம் நீங்கும். 
2.தோலில் பல நாட்களாக இருக்கும் சொரி, படைகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.
3.சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை  துளசிகஷாயம் கொடுத்தால் போதும்.
4.நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா,  துளசி இலைச் சாறில்  இஞ்சி, தேன் கலந்து தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி குடித்தால் போதும்.
5.மன இறுக்கம், இருமல் மற்றும் பிற தொண்டை நோய் உடையவர்கள்துளசி இலைச் சாறில்  இஞ்சி, தேன் கலந்து குடித்தால் குணமாகும் 
6.எலுமிச்சை சாறுடன் துளசி இலையை சேர்த்து நன்றாக அரைத்து தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.