×

கொலஸ்ட்ராலை கூட்டி ,நம் இதயத்தை வாட்டி எடுக்கும் உணவுகள்

 

மனித உடலில் கெட்ட கொழுப்பு அதிகமானால் அது இதயத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் .அதனால் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் பின்வரும் உணவுகளை தவிர்த்தல் நல்லது

வறுத்த உணவுகள்  அதிக கலோரிகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன. குறைந்த கொழுப்புள்ள முட்டை அல்லது பால் பொருட்களை எடுத்துக் கொள்வது உடல் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .

மேலும் மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான பன்றி இறைச்சியில் நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. அவை  உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற இதயம் போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுத்து  மனித உடலில்  கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கின்றன

கேக், பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு போன்ற இனிப்பு  அதிகமாக உட்கொள்வது அதிக கொலஸ்ட்ராலுக்கு காரணமாகிறது. இதற்கு பதிலாக மாதுளை, ஆப்பிள், சப்போட்டா போன்ற பழங்களை  உட்கொண்டால் ஆரோக்கியம் மேம்படும்.

துரித உணவுகள் மூலம்  நீரிழிவு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. அதை தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளை எடுத்து கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்