×

டேய் தம்பி எப்பவும் கம்ப்யூட்டர் முன்னாடியிருக்கிறதால கண் பார்வை கெடாமலிருக்க இந்த ஜூஸை குடிப்பா 

 

இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மேலும் அனைவரும் மொபைல் அதிகமாக பயன்படுத்துகிறோம். இதனால் கண் பார்வை பாதிப்படையும்.கேரட் சாப்பிட்டால் நம்முடைய கண் பார்வைக்கு நல்லது என்பதை அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.கேரட்டில் அதிக அளவு பீட்டா-கரோட்டின் மற்றும் லூட்டின் உள்ளது. அது நம் கான் பார்வையை மேம்படுத்த உதவும். எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் நம் கண் பார்வைக்கு நல்லது.


கேரட் கண் பார்வைக்கு நல்லது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அது உடல் எடையையும் குறைக்க உதவும் என்பது தெரியுமா..? அதுமட்டுமன்றி சருமத்தை பாதுகாத்தல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் என பல நன்மைகளை தருகிறது. அவை என்னென்ன பார்க்கலாம்.


 கேரட் நார்ச்சத்து நிறைந்தது. இதனால் மலச்சிக்கலைத் தவிர்க்கவும் உதவுகிறது. இதுமட்டுமின்றி, கேரட் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. அதோடு இதய நோய்களையும் தடுக்கிறது. உங்கள் தினசரி கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்க உதவும்.

 கேரட் ஜூஸில் உடலுக்குத் தேவையான நிறைவான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக உங்களை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கவும் பயன்படும். மற்ற பானங்களான சோடா மற்றும் இனிப்பு பானங்களோடு ஒப்பிடுகையில், கேரட் ஜுஸ் உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமான பானமாகவும் இருக்கும்.

புற்றுநோய் தடுக்கலாம்:

கேரட்டில் அதிக அளவு கரோட்டினாய்டு உள்ளது. புற்றுநோயை தடுக்க இந்த கரோட்டினாய்டு மிகவும் உதவும்(carrot juice benefits in tamil). இதனை தினமும் எடுத்து கொள்வதால் பல்வேறு புற்றுநோயில் இருந்து நாம் விடுபடலாம்.இதற்க்கு நாம் தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் நமக்கு நல்ல பலன் கிடைக்கும்.

சர்க்கரை நோய்:

முன்பு கூறிய படி கேரட்டில் அதிக அளவு கரோட்டினாய்டு உள்ளதால் அது நம்முடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இரத்தம் சுத்திகரித்து நம்முடைய இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. எனவே தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் நாம் சர்க்கரை நோய் வருவதை தடுக்கலாம்.

சரும பிரச்சனை:

நம் அனைவருக்கும் தெரியும் பேஷியல் செய்வதற்கு கேரட்டை பயன்படுத்துவார்கள் என்று. இதற்க்கு காரணம் கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது நம்முடைய சரும பிரச்சனைக்கு நல்ல நிவரணம் தரும். இதற்க்கு கேரட் பேஷியல் செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தாலே நம்முடைய சருமத்தில் உள்ள வறட்சி நீங்கும். மேலும் சருமம் பொலிவு பெரும்.

செரிமான பிரச்னை:

நாம் உணவு சாப்பிடுவத்ற்கு ஓரு மணி நேரத்திற்கு முன் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை இல்லாமல் பார்த்து கொள்ளலாம்(carrot juice benefits in tamil). கேரட் ஜூஸ் குடிப்பதால் நம்முடைய செரிமான மண்டலத்தை தூண்டி நம்முடைய உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது.

நுரையீரலுக்கு நல்லது:

தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதால் நம்முடைய நுரையீரலுக்கு மிகவும் நல்லது. கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதால் நம்முடைய சுவாச பிரச்சனைகள் நீங்கும். மேலும் புகைபிடிப்பரின் பக்கத்தில் நிற்பதால் அதன் நச்சுப்பொருள் நம்முடைய நுரையீரலை பாதிக்கபடாமல் இருக்க தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்