×

’கொரோனாவின் புதிய சூழலுக்கு மாறிக்கொள்ள உதவும் புத்தகங்கள்’ பரிந்துரைக்கிறார் டாக்டர் டி.வி. நித்யானந்தன்

’நேற்று போல இன்றில்லை’ எனப் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், கொரொனா நோய்த் தொற்று அளித்திருக்கும் முடக்கம் என்பது வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதது போலாகி விட்டது. ஏனெனில், முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சிக்கல் எனில், நாட்டின் ஒரு பகுதி முடங்கியிருக்கும். இப்போது கொரோனாவால் உலகின் ஒரு பகுதியே முடங்கிக் கிடக்கிறது. இந்தப் புதிய சூழலை எதிர்கொள்ள, அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள உதவும் விதத்தில் கருத்தரங்கம் ஒன்றில் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை
 

’நேற்று போல இன்றில்லை’ எனப் பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், கொரொனா நோய்த் தொற்று அளித்திருக்கும் முடக்கம் என்பது வரலாற்றின் முன் எப்போதும் இல்லாதது போலாகி விட்டது.

ஏனெனில், முன்பெல்லாம் ஏதேனும் ஒரு சிக்கல் எனில், நாட்டின் ஒரு பகுதி முடங்கியிருக்கும். இப்போது கொரோனாவால் உலகின் ஒரு பகுதியே முடங்கிக் கிடக்கிறது. இந்தப் புதிய சூழலை எதிர்கொள்ள, அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ள உதவும் விதத்தில் கருத்தரங்கம் ஒன்றில் சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் டி.வி. நித்யானந்தன்.

’தற்போதைய நோய்த் தொற்று சூழ்நிலையில் ஒட்டுமொத்த உலகமே பெரிய மாற்றத்துக்கு ஆளாகியுள்ளது. இருந்தபோதிலும் இதன் மூலம் நடந்துள்ள நேர்மறை விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்தால், மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

நோய்த் தொற்று சூழ்நிலையால் ஏற்பட்ட நேர்மறை விளைவுகளை அறிந்து கொள்வது அதற்கு அவசியமாகிறது. வாழ்க்கை பற்றியும், மக்களின் சிந்தனை பற்றியும் இந்தச் சூழ்நிலை ஒரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. முடக்கநிலை அமல் காரணமாக, மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிட்டனர். அதற்கு முந்தைய காலக்கட்டத்தில் அந்தப் பழக்கத்தை அவர்கள் மறந்திருந்தனர் .

இன்றைக்கு நாம் செய்யும் எல்லாமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளன. ஒரு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எளிதான ஒரு நடைமுறையை செயல்படுத்துவதற்கும் கூட தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், தேவையான சமயங்களில் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

முந்தைய மாதங்களில் டிஜிட்டல் சாதனங்களின் திரைகளில் குழந்தைகள் நேரத்தை செலவிடுதலுக்குக் கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் வெளியில் சென்று விளையாடும்படி பெற்றோர்கள் கூறினர். ஆனால், இப்போது, குழந்தைகளை வெளியில் செல்ல வேண்டாம் என்று நாம் கூறுகிறோம். 4 வயதான குழந்தைகளுக்கும் கூட ஆன்லைன் மூலம் கற்பித்தல் நடக்கிறது. அவர்களை வீட்டிலேயே இருந்து செல்போன் பயன்படுத்தும்படியும், வீடியோ கேம்கள் விளையாடுமாறும் கூறுகிறோம் “ என்கிறார்.

புதிய வாழ்க்கை சூழலுக்கு எப்படி மாறிக் கொள்வது என்பதற்கான வழிகாட்டுதல்களை அளிக்கும் சில புத்தகங்களைப் படிக்குமாறு மக்களை அவர் பரிந்துரைக்கிறார். ”டான் பிரவுன் எழுதிய Origin புத்தகம், சீர்திருத்த வழியில் இறைவனைப் பற்றிப் பேசுகிறது. அறிவியல் மற்றும் உலகின் எதிர்காலம் பற்றி பேசுகிறது. கால் நியூபோர்ட் எழுதிய Digital Minimalism புத்தகம், மாறிவரும் உலகில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வாழ்வதில் எப்படி கவனம் செலுத்துவது என விவரிக்கிறது. கால் நியூபோர்ட்டின் Deep Work என்ற மற்றொரு புத்தகம், சிதறல் இல்லாமல் ஒருமித்த கவனம் செலுத்தும் திறன் பற்றியும், குறைவான நேரத்தில் அதிகமான விஷயங்களை எப்படி சாதிப்பது என்பது குறித்தும் விவரிக்கிறது.

ஷோசனா ஜூபோஃப் எழுதிய The Age of surveillance Capitalism புத்தகம், நமது அந்தரங்கத் தகவல்கள் எதிர்காலத்தில் வெறும் விற்பனைப் பொருளாக மாறிவிடும் என்பதால், தொழில்நுட்ப காலத்தில் தனிப்பட்ட தகவல்களில் ரகசியத்தன்மை என்பது இருக்காது என்பதை நினைவுபடுத்துவதாக உள்ளது. அதேசமயத்தில், நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்ற வழிமுறைகளையும் அந்தப் புத்தகம் விளக்குகிறது. “திரையைப் பார்த்துக் கொண்டிருக்கும்”  கேம்கள், சமூக ஊடகம் போன்றவற்றில் ஈடுபாடு மூலம் பலரை ஒன்று சேர்ப்பது மற்றும் எல்லைகளை நிர்ணயித்துக் கொள்வதில் பெற்றோர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை சோனியா லிவிங்ஸ்டோன் மற்றும் அலிசியா பிளம்-ராஸ் எழுதிய  Parenting for a Digital future புத்தகம் விளக்குகிறது” என்று தெரிவித்தார்.