×

எல்லா பிளட் குரூப் காரங்களுக்கும் கொரோனா ரிஸ்க் சமம்தான்! – ஆய்வில் தகவல்

சில ரத்த குரூப் உள்ளவர்களுக்கு கொரோனா பரவல் குறைவாகவே உள்ளது. ஆனால், சில வகை ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா தீவிரமாக பரவுகிறது என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது. பல முன்னணி ஊடகங்களிலும் கூட இது தொடர்பாக செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் இது தவறான தகவல் என்று தெரிவித்துள்ளனர். ஏ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா அதிகமாக பரவுகிறது என்று முன்பு கூறப்பட்டது. மேலும் சில வகை
 

சில ரத்த குரூப் உள்ளவர்களுக்கு கொரோனா பரவல் குறைவாகவே உள்ளது. ஆனால், சில வகை ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா தீவிரமாக பரவுகிறது என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது. பல முன்னணி ஊடகங்களிலும் கூட இது தொடர்பாக செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் இது தவறான தகவல் என்று தெரிவித்துள்ளனர்.

ஏ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா அதிகமாக பரவுகிறது என்று முன்பு கூறப்பட்டது. மேலும் சில வகை ரத்த குரூப் உள்ளவர்களுக்கு கொரோனா பரவல் மிகக் குறைவுதான் என்றும் கூறப்பட்டது. ஆனால், ரத்த வகைக்கும் கொரோனா பரவலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

JAMA நெட்வொர்க் என்ற மருத்துவ இதழில் ரத்த வகைகளுக்கும் கொரோனா பரவலுக்கும் உள்ள தொடர்பு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை பதிப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யூட்டா இன்டர்மவுன்டெய்ன் மெடிக்கல் சென்டர் ஹார்ட் இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சியாளர்கள் டாக்டர் ஜெஃப்ரி ஆண்டர்சன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.

யூட்டா மாகாணத்தில்  24 மருத்துவமனைகள், 215 க்ளீனிக்குகளில் ஆய்வு செய்யப்பட்டது. இங்கு சிகிச்சை பெற்ற கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் 11,500 பேரின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துள்ளனர். அதில் ஏ பாசிடிவ், ஏ நெகட்டிவ், பி பாசிடிவ், பி நெகட்டிவ், ஓ பாசிடிவ், ஏபி பாசிடிவ் ரத்த வகையினருக்கு கொரோனா தொற்று வாய்ப்பு அதிகம் உள்ளதா என்று ஆய்வு செய்துள்ளனர்.

இந்த ஆய்வில் இந்த ரத்த வகையினருக்குத்தான் கொரோனா பரவல் அதிகம் உள்ளது என்பதற்கும், இவர்களுக்குத்தான் தீவிர பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்குமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதன் அடிப்படையில் ரத்த வகைக்கும் கொரோனா தொற்று பரவலுக்கும் தொடர்பு இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

கொரோனாத் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்த ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று எதுவும் இல்லை. அதே நேரத்தில் வயதானவர்களுக்கு இதன் பாதிப்பு தீவிரமாக உள்ளது. எனவே, வயதானவர்கள் கொரோனா பாதிப்பைக் குறைக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.