×

முதியோர் பிளாக் டீ குடிச்சா எந்த நோயிலிருந்து தப்பலாம் தெரியுமா ?

 

பொதுவாக பெரும்பாலான மக்கள் இன்று டீ அல்லது ப்ளாக் டீ குடிக்கின்றனர் .இந்த பிளாக் டீயில் ஏரளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இதிலிருக்கும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மனிதனுக்கு புற்று நோய் வருவதை தடுக்கிறது .மேலும் தோல் புற்று நோய் வருவதையும் இது தடுக்கிறது .மேலும் உடல் எடை குறைக்க நினைப்போர் இந்த டீயை பருகலாம் .மேலும் நமக்கு தலை முடி உதிர்வை தடுத்து நம் தலைமுடிக்கு பாதுகாக்கும் .மேலும் வயிற்று போக்கு ஏற்படும் சமயத்தில் இதை குடித்தால் அந்த வயிற்று போக்கை இது தடுத்து நிறுத்தும்

பல முதியோர் இன்று அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்னர் . இது வயதான நபர்களில் சிலருக்கு ஞாபகத்திறன் குறைவு, சிந்திக்கும் ஆற்றல் இழப்பது போன்றவற்றை குறிக்கும் ஒரு மோசமான நோயாகும்.இந்நிலையில் அந்த அல்சைமரால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் பிளாக் டீ தொடர்ந்து அருந்தி வரும் போது அது  மூளையை புத்துணர்ச்சியடையச் செய்யும் .

அதற்குள் உள்ள ரசாயனங்கள் மூளை செல்களை அதிகம் தூண்டி தெளிவாக சிந்திக்கும் ஆற்றலையும், சிறந்த ஞாபக சக்தியையும் வயதானவர்களுக்கு கொடுத்து அவர்களை பாதுகாக்கிறது 

 உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இதிலிருக்கும் வேதி பொருட்கள் உடலில் எடையை கூட்ட உதவும் ட்ரைகிளிஸெரைட் கொழுப்பின் அளவை மிகவும் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து எடை அதிகரிக்காமல் பாதுகாப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிப்பதால் இதை தொடர்ந்து பருகி வரலாம் .