×

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக் கட்டத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தற்போது கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெறுகிறது. இந்தியாவிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி வருவதற்கு முன்பு முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அவசியம்
 

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக் கட்டத்தில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தற்போது கொரோனா வைரஸுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெறுகிறது. இந்தியாவிலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி வருவதற்கு முன்பு முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் அவசியம் எனக் கூறப்பட்டது. ஆனால் தடுப்பூசியின் வருகைக்குப் பிறகு அமெரிக்காவில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவித்தது. சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தது. இதுதொடர்பாகப் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

ரன்தீப்

ஆனால் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியாவோ, கொரோனா வைரஸுக்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் முகக்கவசம் அணிந்துகொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்றும் பழக்கத்தைத் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வைரஸானது நாளுக்கு நாள் உருமாறும் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.

விஜயராகவன்

புதிதாக வரும் உருமாறிய வைரஸுக்கு இந்த தடுப்பூசி எந்தளவு பயன் அளிக்கும் என்பதை நம்மால் கூற முடியாது. எனவே வைரஸ் எப்படி உருமாறினாலும் முகக்கவசம் அணிந்துகொள்வதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதின் மூலம் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்” என்றார். முன்னதாக மத்திய அரசின் அறிவியல் ஆலோசகரான விஜயராகவன் கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலமே அந்த அலையைத் தவிர்க்க முடியும் எனவும் கூறியிருந்தார்.