வயதானவர்கள் வாரத்திற்கு ஒருமுறை மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
பொதுவாக பழங்கள் நம் உடலில் கெட்ட கொழுப்பு படிவதை தடுத்து நம் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கிறது .பல பழங்களில் நல்ல கொழுப்பு அடங்கியுள்ளது .எனவே நம் இதயத்திற்கு தீங்கு ஏற்படாமல் இருக்க எந்த பொருளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.சரிவிகித உணவுக்கு, பழங்களைச் சேர்த்துக் கொள்வதும் அவசியம். பல பழங்கள் இதயத்திற்கு ஆரோக்கியமானவை
2.ஆப்பிள், திராட்சை, சிட்ரஸ் பழங்கள் இருதய நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.
3.வால்நட் போன்ற கொட்டைகள் இருதயத்துக்கு வலு சேர்க்கின்றன. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
4.பொதுவாக நட்ஸ் என்கிற கொட்டைகளை தினமும் உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
5.பூண்டு கொலஸ்ட்ராலை வேகமாக குறைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
6. அதிகப்படியான கொலஸ்ட்ரால் காரணமாக தமனிகளின் வீக்கம் மற்றும் கடினமாவதை தடுக்க வெங்காயம் உதவுகிறது
7.. கீரை வகைகளில் பசலைக்கீரை கெட்ட கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
8.இரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் மீன்கள் முக்கியமானவை.
9. சால்மன், கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் கொழுப்பு அமிலங்களின் ஆதாரம் போதுமான அளவு உள்ளது.
10.ஒமேகா3 மூலம் இருதய நலன் மேம்படுகிறது. பக்கவாதம் அபாயம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
11. வயதானவர்கள் வாரத்திற்கு ஒருமுறை வேகவைத்த அல்லது சுட்டெடுத்த மீன்களை சாப்பிடலாம்.