ஊற வைத்த அத்திப்பழத்தை காலையில் சாப்பிடும் பொழுது என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக அத்தி பழம் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது .
இரவு முழுவதும் அத்தி பழம் ஊறிய பிறகு காலையில் அத்திப்பழத்தை ஊற வைத்த தண்ணீரிலிருந்து எடுத்து கொள்ளுங்கள். பின்னர் வெறும் அத்திப்பழத்தை மட்டும் சாப்பிடுங்கள். இதை வெறும் வயிற்றில் தேன் கலந்தும் சாப்பிடலாம். ஊற வைத்த அத்திப்பழத்தை காலையில் சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும்.மேலும் அத்தி பழம் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
1.சிலருக்கு தீராத மலசிக்கல் இருக்கும் .இப்படி மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து அத்திப்பழத்தை ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வரும் பொழுது அவர்களுடைய மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் சரியாகும்.
2.இந்த மலசிக்கல் தீர காரணம் அத்திப்பழத்தில் இருக்கக்கூடிய கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள்.
3.அத்தி பழத்தில் உள்ள சத்துக்கள் நம்முடைய குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
4.மேலும் அத்தி பழத்தில் உள்ள சத்துக்கள் நம்முடைய செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
5.மேலும் அத்திப்பழம் நம்முடைய எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
6.இந்த ஆரோக்கியத்துக்கு காரணம் அத்திப்பழத்தில் கால்சியம் உள்ளது.
7.இந்த அத்தி பழத்தின் சத்துக்கள் நம்முடைய எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவசியம்.
8.பொதுவாக நம்முடைய உடல் கால்சியத்தை தானாகவே உற்பத்தி செய்யாது.
9.எனவே நம்முடைய உடலுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது முக்கியம்.அதற்கு இந்த அத்தி பழம் உதவுகிறது