×

தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால் நேரும் அதிசயம் .

 

பொதுவாக தர்பூசணி பழம் கோடை காலத்தில் ஏராளமாய் ,மலிவாய் கிடைக்கும் ஒரு பழம் ஆனால் இப்போது எல்லா காலங்களிலும் கூட கிடைக்கிறது .இந்த பழத்தின் தோல் முதல் சாறு வரை நிறைய மருத்துவ குணம் கொண்டவை .அதனால் இந்த பதிவில் தர்பூசணியில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் பார்க்கலாம் 

1.பொதுவாக தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைக்கும் 
2.தர்பூசணியின்  சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும்.  
3.தர்பூசணியில் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.
4.தர்பூசணியின்  சாற்றை ஸ்கின்னுக்கு  பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம்  போன்றவை நீங்கும் .
5. தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால்,முகத்தில்  வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.
6.தர்பூசணி, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். 
7.ஒருவரின் முகத்தில் பருக்கள் இருந்தால்,  அதனை போக்குவதற்கு அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 
8.இப்படி மசாஜ் செய்வதால் முகத்தில் வரும்  முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.