×

வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் எந்த நோய்களை தடுக்கலாம் தெரியுமா ?

 

பொதுவாக வால் நட் பருப்புகள் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் .
உதாரணமாக வால்நட் பருப்புகளில் தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.மேலும் வால்நட் பருப்புகளாலே நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் 

1.வால்நட் பருப்பில் இருக்கும் சில வைட்டமின்கள் , மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு வேலை செய்யும்.
2.வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை பெருகும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 
3.இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன

4.வால்நட்டின் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள்  ஆண்களின் உற்சாகத்தையும், விந்தணுவையும் அதிகரிக்கிறது.
5.தினமும் வால்நட் பருப்பு சாப்பிட்டு வந்தால்,  கெட்ட கொழுப்பு குறைந்து, இதயம் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் குணமாகிறதாம்.
6.மேலும் வால்நட் பருப்பு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், மூளை உள்ளிட்ட உள்ளுருப்புகளுக்கு அதிக நன்மை செய்கிறது.
7.மேலும் வால்நட் நமது உடலில் ஈரல் மற்றும் பித்தப்பை உடலுக்கு தேவையான சக்திகளை உற்பத்தி செய்கிறது.
 8.வால்நட்ஸ் பருப்புகளை தொடர்ந்து சாப்பிடும்போது பித்தப்பை கற்களை கரைத்து சிறப்பாக செயல்படுகிறது.