சூவிங் கம் சாப்பிடுவதன் மூலம் எந்த நோயை தடுக்கலாம் தெரியுமா ?
பொதுவாக ஒருவருக்கு அசிடிட்டி என்ற வயிற்றில் அமில தன்மை சுரக்க பல்வேறு காரணம் உள்ளது .இந்த அசிடிட்டியை தவிர்ப்பதற்கான எளிய வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1. சூவிங் கம் சாப்பிடுவதன் மூலம் எச்சில் அதிகம் ஊற வாய்ப்புள்ளது .இது உணவுக்குழாய் வழியே சென்று வயிற்று அமிலத்தை சுத்தம் செய்யும்.ஏனெனில் இதில் பைக்கார்பனேட் அடங்கியுள்ளது
2. அசிடிட்டியை தவிர்ப்பதற்கு கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், கஃபீன், சோடா, புதினா, சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வெங்காயம் ஆகியவை அதிகம் உண்ண கூடாது .
3.அசிடிட்டியை தவிர்ப்பதற்கு நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
4.அசிடிட்டியை தவிர்ப்பதற்கு மூன்று வேளை உண்பதற்கு பதிலாக 4-5 வேளை பிரித்து உண்ணலாம்.
5.சிலருக்கு செரிமானம் ஆகாத மாவுச்சத்துக்கள் பாக்டீரியா வளர வழிசெய்யும்எனவே அசிடிட்டியை தவிர்ப்பதற்கு இந்த உணவுகளை குறைக்கலாம் .
6.மாவு சத்து காரணமாக வயிற்றில் அழுத்தம் அதிகரித்து அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது.
7.மேலும் ஒருவர் மது அருந்துதல் அமிலத்தன்மையை அவருக்கு அதிகரிக்கும்.
8.இந்த மது பழக்கம் நெஞ்செரிச்சலை அதிகரிப்பதுடன், உணவுக்குழாயில் இருந்து அமிலம் நீங்குவதை தவிர்க்கும். எனவே, மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது.
9.: அசிடிட்டி தொல்லை இருப்பவர்கள் உறங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்பாகவே உணவருந்தி விட்டால் நல்லது ,அப்போது உணவு செரிமானம் ஆகிவிடும்
10.தூங்கும் முன் சாப்பிட்டால் உணவு செரிக்காமல் அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது