கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு இந்த சாறு சிறந்த இயற்கை சிகிச்சை
பொதுவாக கரும்பிலிருந்து கிடைக்கும் கரும்பு சாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த கரும்பு சாறை எந்த நேரத்தில் எப்படி சாப்பிட்டால் என்ன நன்மை கிடைக்கும் என்று இந்த பதிவின் மூலம் நாம் அறியலாம்
1.சிலருக்கு கல்லீரல் கோளாறு இருக்கும் .அவர்களின் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது கரும்புச்சாறு.
2.சிலருக்கு மஞ்சள் காமாலை நோய் வரும் .இந்த மஞ்சள் காமாலை போன்ற கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு கரும்புச்சாறு சிறந்த இயற்கை சிகிச்சையாக சொல்லப்படுகிறது.
3.கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் மாங்கனீஸ் ஆகியவை கரும்பு சாறில் உள்ள இயற்கை சத்துக்கள் ஆகும்
4.கரும்பு சாறு உடலில் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுகிறது .
5.கரும்புச்சாறு புற்றுநோய் செல்களை குறிப்பாக புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.
6.கரும்புச்சாறு நம் உடலின் செரிமான அமைப்பை ஆரோக்கியப்படுத்துகிறது.
7.கரும்புச் சாறு pH அளவை சமன் செய்து செரிமான சாறுகள் சுரப்பதை எளிதாக்குகிறது.
8.ஆரோக்கியமான கரும்பு சாறு வயிற்றில் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.
9.மேலும் சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிக்கிறது கரும்பு சாறு.
10.இயற்கையான குறைந்த கொழுப்பு, குறைந்த சோடியம், நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாத கரும்பு சாறு சிறுநீரகத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.