இளநீருடன் கரும்பு சாறு கலந்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்
பொதுவாக கரும்பில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்கள் நம் உடலின் இயக்கத்தை சீராக்க பெரிதும் உதவி புரிகின்றது.இந்த கரும்பு சாறு அடிக்கடி குடிப்பதன் மூலம் நம் உடல் பெரும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப்பதிவில் பார்க்கலாம்
1.கரும்பில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள் ,விட்டமின்கள் இதில் அதிகம் காணப்படுகின்றன.
2. மேலும் கரும்பில் இரும்புச் சத்து, மக்னீசியம் , வைட்டமின் பி1, ரிபோஃப்ளேவின் போன்றவை அதிக அளவில் இருக்கின்றன.
3.நமக்கு உண்டாகும் நோய்களை எதிர்த்து போராட ஆன்டி ஆக்ஸிடன்கள் தேவை .இந்த ஆன்டி ஆக்சிடென்ட் கரும்பில் காணப்படுகின்றன.
4.இந்த ஆன்டி ஆக்சிடென்ட் மலேரியா, தோல் புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி ஆகியவற்றை சிக்கலான நிலைமைக்கு கொண்டு செல்லும். .
5.இந்த கரும்பு நம் உடலில் தேவைக்கு அதிகமாக இருக்கும் உப்பு, தண்ணீர் ஆகியவற்றை முறையாக வெளியேற்றி சிறுநீரகங்களை பராமரிக்கிறது.
6.இந்த உப்பு தண்ணீரை வெளியேற்ற கரும்பில் உள்ள டையூரிடிக் பண்புகள் உதவியாக உள்ளன.
7.மேலும் எலுமிச்சை சாறு அல்லது இளநீருடன் கரும்பு சாறு கலந்து குடிப்பதால் சிறுநீரக பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
8.சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் தொற்று, எரிச்சல் ஆகியவற்றை நீக்க கரும்பு சாறு உதவும்
9.சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை நாம் எடுத்துக் கொள்ளும் போது எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கரும்பு உண்ணும் போது அது எடை குறைப்புக்கு உதவுகிறது.
10.கரும்பு சாறு கர்ப்பிணிகளுக்கு மிதமான எடை அதிகரிப்புக்கு உதவுகிறது.
11.கர்ப்பிணிகள் கரும்புச் சாற்றை இஞ்சியுடன் அருந்தலாம்.