×

ஸ்மூத்தி சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா ?

 

பொதுவாக பழங்களின் மூலம்  நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது .அந்த பழங்களை ஜூஸ் போட்டு சிலர் குடிப்பர் .இன்னும் சிலர் அப்படியே சாப்பிட்டு பலனடைவர் .ஆனால் இந்த பழங்களை ஸ்மூத்தி தயாரித்து உண்டால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் .இந்த ஸ்மூத்தியின் பலன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பழங்களின் மூலம் தயாரிக்கப்படும்   ஸ்மூத்தியில் நார்சத்து, தாதுக்கள், விட்டமின்கள் நிறைந்து உள்ளது. 2.ஸ்மூத்தி தயாரிப்பில் கழிவு என்று எதையும் நாம் வீணடிப்பதில்லை. ஸ்மூத்தியின் சேர்மானங்களே அது ஒரு வேளைக்கான சரிவிகித உணவாக மதிப்பிடப்படுகிறது.
3.ஸ்மூத்தி தயாரிப்பில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், உலர் பழங்கள், உலர் விதைகள்,சேர்க்கப்படும்  
4.ஸ்மூத்தி தயாரிப்பில் தாவரப் பால் வகையில் வரும் சோயாப்பால், தேங்காய் பால், நிலக்கடலை பால் மற்றும் இனிப்பூட்டிளான தேன், ஸ்டீவியா, ஸிரப்புகள் இவற்றோடு பால் பொருட்களான பால், தயிர், சீஸ் வகைகள் கொண்டு அரைக்கப்பட்ட கலவை சேர்க்கப்படும் . 
5.ஸ்மூத்தி தயாரிப்பில் சாக்லேட் சிப்ஸ்கள், ஐஸ்கிரீம் சேர்ப்பவர்களும் உண்டு.
6.ஸ்மூத்தி சாப்பிடுவதால் ஒரு நாளுக்கு தேவையான விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து நிறைந்த சரிவிகித உணவு. உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
7.ஸ்மூத்தி சாப்பிடுவதால் சருமத்திற்க்கு பளபளப்பும், கூந்தல் வளர்ச்சிக்கும் உதவி , இளமையான தோற்றம் கிடைக்கும் . 
8.ஸ்மூத்தி சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும், செரித்தலை தூண்டும்.
9.ஸ்மூத்தி சாப்பிடுவதால் உடலில் தேங்கிய கழிவுப் பொருட்களை அகற்றும். 
10.ஸ்மூத்தி சாப்பிடுவதால் உடலின் உள்ளுறுப்புகள் நன்கு செயலாற்றுவதால், நோய் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. 
11.ஸ்மூத்தி சாப்பிடுவதால் நல்ல உறக்கம், ஆரோக்கியமான மனநிலை கிடைக்கும் ,மேலும் ஸ்மூத்தி சாப்பிடுவதால், சுறுசுறுப்பு கூடுவதால் செயல்திறன் கூடுகிறது