×

சியா விதைகளை  உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம்  எந்த நோயெல்லாம் வராது தெரியுமா ?

 

பொதுவாக நம் உடலுக்கு இரும்புச்சத்து அவசியம் .இந்த இரும்பு சத்து நம் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு ரத்தத்தில் ஹீமோகுளோபினையும் அதிகரிக்கும். அதோடு அனீமியா என்னும் ரத்த சோகையைத் தீர்க்கவும் உதவுகிறது.
பேரீட்சைப்பழம் மற்றும் கீரையை தவிர வேறு சில இரும்புச்சத்து உள்ள உணவுகளை பற்றி இந்த பதிவினில் பார்ப்போம்.

1.சிலரின் உடலில் இரும்பு சத்து குறைவாய் இருக்கும் .பருப்பு மற்றும் பயிறு வகைகளில் புரதங்கள் இருப்பதை தாண்டி அதிகளவு இரும்புச்சத்தும் உள்ளது.
2.இந்த இரும்புச்சத்துடன் புரதமும் இணையும்போது உடல் வலுவடையும்,  ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையாமல் பார்த்துக் கொண்டு நம் ஆரோக்கியம் காக்கும் 
3.மேலும் ஆரோக்கியம் மிகுந்த சியா விதைகளில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளதோடு இரும்புச்சத்தும் அதிகமாகவே இருக்கிறது.
4.இந்த சியா விதைகளை  உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமலும் தடுக்கிறது.
5.அடுத்து முந்திரியில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதோடு இரும்புச்சத்தும் அதிகளவு உள்ளது.
6.சிலருக்கு இரத்த சோகை பிரச்சினை இருக்கும் .இப்படி உள்ளவர்கள் தினமும் 4 முந்திரி பருப்பை காலை வேளையில் சாப்பிட்டு வரலாம்.
7.அடுத்து கொண்டைக்கடலை பற்றி பார்ப்போம் .இந்த கடலையில் ஊட்டச்சத்து மிகுந்துள்ளன. இதில் புரதங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றோடு இரும்புச்சத்தும் நிறைந்திருக்கிறது.
8.குழந்தைகளுக்கு தினமும் ஒரு கைப்பிடி அளவாவது கொண்டைக்கடலையை சாப்பிடக் கொடுத்தால் ரத்த சோகை வராமல் தடுக்கும். மேலும் அவர்களின் தசை வளர்ச்சி நன்றாக இருக்கும் .
9.அடுத்து பூணிக்காய் பற்றி பாப்போம் .இந்த காயின் விதையில் புரதங்கள், வைட்டமின்கள் இருப்பதோடு அதிகளவு இரும்புச்சத்தும் உள்ளன.
10.அதிக ஆரோக்கியம் உண்டாக பூசணிக்காயை விதையை வறுத்து ஸ்னாக்ஸ் போலவும் உண்ணலாம்.மேலும் விதையை பொடித்து சூப் செய்தும் சாப்பிடலாம்