×

 இந்தப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும் 

 

பொதுவாக பழங்களில் நம் உடலுக்கு தேவையான நன்மைகள் உள்ளது .அதிலும் சீத்தா பழத்தில் நமக்கு பல நன்மைகள் அடங்கியுள்ளது .
உதாரணமாக சீத்தாப்பழத்தில் தாமிரச் சத்தும் அதிகம் இருப்பதால் செரிமானத்திற்கு நன்கு உதவுகிறது. ஆகவே மலச்சிக்கல் வராமல் தடுத்து உடல் இயக்கத்திற்கு பயன்படக்கூடிய நன்மை பயக்கக்கூடிய பாக்டீரியாக்களை அதிகரிக்கின்றது.இந்த பதிவில் இந்த சீத்தா பழத்தின் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி பார்க்கலாம் 

1.பொதுவாக ஆரோக்கியமுள்ள சீத்தாபழத்தில் வைட்டமின், புரதம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகமாக உள்ளன.  
2.சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இதய நோய் வராமல் தடுக்கும்.சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றலை அதிகரிக்கும்.
3.சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் ஆரம்ப நிலை காசநோயை உடலில் இருந்து நீக்கும். மற்ற வகை காசநோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையது. 
4.சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்கும். கோடை காலத்தில் ஏற்படக் கூடிய நாவறட்சியை நீக்கும். சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை உடையது.
5.சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் உள்உறுப்புக்களில் ஏற்படும் புண்களை ஆற்றும் தன்மை இதில் உள்ளது. 
6.ஊற வைத்த வெந்தயத்துடன் சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். சீத்தாப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
7.சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய இரண்டும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது. 
8.சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவடையச் செய்ய ஊக்குவிக்கின்றது. இது ரத்த அழுத்தமானது சீராக்கி இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. 
9.சீத்தாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து ரத்தசோகை நோயை போக்கும். 
10.அதுமட்டுமின்றி உடல் சோர்வைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை தரும். உடல் வலிமை பெற சீத்தாப்பழத்தை திராட்சை பழச்சாற்றுடன் கலந்து ஜூஸாக பருகி வரலாம்.