முள்ளங்கியை உணவில் சேர்த்து வர என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை தங்கள் தினசரி உணவு சேர்த்துக் கொள்ளலாம் இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் C போலிக், ஆசிட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன.
முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் இவ்வளவு ஆரோக்கியம் தரும் முள்ளங்கியால் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்
1.முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
2.இதை உங்கள் உணவில் சேர்த்து வர உடல் எடையை குறைப்பதும் முதல் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
3.முள்ளங்கியில் அதிக அளவுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
4.இதை உணவில் சேர்த்து வர சளி இருமல் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை தடுக்கலாம்.
5.முள்ளங்கி ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது.
6.முள்ளங்கியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது மல இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது.
7.முள்ளங்கியை உணவில் சேர்த்து வர உடல் பருமன், வாயு, குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
8.முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன.
9.முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
10.முள்ளங்கி இரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
11.மேலும் முள்ளங்கியை சாப்பிட்டு வர உடல் சூட்டையும் குறைக்கலாம்.