உணவுகளில் காரத்திற்காக மட்டுமே சேர்க்கப்படும் மிளகால் நம் உடலில் நேரும் அதிசயம்
பொதுவாக நாம் சமையலில் பயன்படுத்தும் மிளகு ஜலதோஷம் முதல் ஆஸ்த்மா வரை குணப்படுத்தும் .மேலும் இந்த மிளகு மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
உணவுகளில் காரத்திற்காக மட்டுமே சேர்க்கப்படும் மிளகில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன.
1.நாம் சமையலில் சேர்க்கும் மிளகு ,சளி, இருமல், ஆஸ்துமா போன்ற பல நோய்களுக்கான மருந்தாக சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது
2.பசும்பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து மிளகுத்தூள், மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து கடைந்து குடித்தால் நெஞ்சுசளி ஓடியே விடும் .
3.அடுத்து மிளகுடன் 10 துளசி இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து கொள்வோம் .அதை குடித்தால் எப்பேர்பட்ட கோழைக்கட்டு நீங்கிவிடும்.
4.ஆரோக்கியம் மிகுந்த மிளகுக்கு சருமப்புற்றுநோய், வயிற்று புற்றுநோய் உட்பட பல நோய்கள் வருவதை தடுக்கும் திறன் மிளகுக்கு உண்டு.
5.8 முதல் 10 மிளகை எடுத்துக் கொண்டு இடித்து விட்டு நீரில் போட்டு கொதிக்க வைத்து,பனைவெல்லம் கலந்து குடித்தால் சளி, இருமல் காணாமல் போகும்.
6.ஆரோக்கியம் மிகுந்த மிளகுடன் வெற்றிலை போட்டு கொதிக்க வைத்து குடித்தால் தும்மல், மூக்கில் நீர் வடிதல் பிரச்சனைக்கு தீர்வளிக்கும்.
7.ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து முகப்பருக்களின் மீது போட்டு வந்தால் நாளடைவில் பருக்கள் காணாமல் போகும்
8.சுமார் 10 மிளகை வெறும் வாணலியில் போட்டு வறுத்தெடுக்க வேண்டும், சூடு ஆறியதும் ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்
9.சுக்குடன் மிளகு சேர்த்து , கருப்பட்டி கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
10.மிளகுடன் கல் உப்பு சேர்த்து ,பல் துலக்கினால் பல்ஈறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் காணாமல் போகும்