×

இரவு முழுவதும் ஊறவைத்த பாதாமை தினமும் சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?

 

பொதுவாக இரவு முழுவதும் ஊறவைத்துள்ள பாதாம் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.ஆனால் இதை பச்சையாக தோலுடன் சாப்பிட்டால் நிறைய பக்க விளைவுகள் உண்டாகும் ,மேலும் இது பற்றியும் இரவு முழுவதும் ஊறவைத்துள்ள பாதாமை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மை குறித்தும் இந்த பதிவில் நாம் காணலாம் 

1.பொதுவாக பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால் நம் குடலுக்கு செரிமானிக்க கடினமாக இருக்கும். 
2.பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால்  இதன் பக்கவிளைவாக வயிற்று மந்தம், வயிற்றுப்போக்கு போன்ற கோளாறுகள் உண்டாகலாம்.
3.பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆன்டி நியூட்ரியண்ட்ஸ் , டானிக் மற்றும் ஃபைடிக் அமிலம் போன்றவை தோலில் இருப்பதால் அவை ஊட்டச்சத்து உறிஞ்சுவதை தடுக்கிறது. 
4.பாதாம் தோலை நீக்காமல் சாப்பிட்டால்  இரத்தத்தில் பித்தம் அதிகரிக்கலாம். 
5.எனவே அதன் தோலை இரவு முழுவதும் ஊற வைத்து அதன் தோலை நீக்கிவிட்டுதான் சாப்பிட வேண்டும்.
6.இரவு முழுவதும் ஊறவைத்துள்ள பாதாமை தினமும் 5-6 சாப்பிட்டு வர அன்றைய தினம் ஆற்றல் மிக்கதாகவும், சுறுசுறுப்பாகவும் உணர்வீர்கள்.
7.இரவு முழுவதும் ஊறவைத்துள்ள பாதாமில்  புரதச்சத்து, நார்ச்சத்து, விட்டமி ஈ, ஒமேகா 3, ஒமேகா 6 , மெக்னீசியம், கால்சியம் , இரும்பு, பொட்டாசியம் மற்றும் ஸிங்க் போன்ற ஊட்டச்சத்துக்களை நிறைவாக கொண்டுள்ளது. 
8.எனவே தினமும் குறைந்தது 5 பாதாம் சாப்பிட்டு வர ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்க்கலாம்.
9.அதுமட்டுமன்றி இரவு முழுவதும் ஊறவைத்துள்ள பாதாம் மூளை மற்றும் நரம்புகளுக்கு நல்லது. 
10.இரவு முழுவதும் ஊறவைத்துள்ள பாதாம் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது