பாதாம் எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் எந்த பிரச்சினை சரியாகும் தெரியுமா ?
பொதுவாக முடி உதிர்வு பிரச்சினை இன்று பலருக்கும் இருக்கிறது .இந்த முடி உதிர்வு பிரச்சினையை சமாளிக்க பலர் பல வைத்தியம் செய்தும் பலனின்றி இருக்கின்றனர் .ஆனால் இந்த பதிவில் சில இயற்கை வைத்தியம் பற்றி கொடுத்துள்ளோம்
முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான முடி வளர வைக்கும் சில பாட்டி வைத்தியம் இதோ -
1.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் வேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க விடவும்
2.பின்னர் அந்த தண்ணீரில் தலைமுடியை அலசி வந்தால் முடி உதிர்வு தடுத்து நிறுத்தப்படும்
3.வாரத்திற்கு 3 முறை செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து அதை தலையில் தடவி வாருங்கள் ,
4.செம்பருத்தி இலையை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி செழித்து வளரும்.
5.அடுத்து முடி உதிர்வை தடுக்க, தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவாக எடுத்து கொள்ளவும் ,
6.மேற்கூறிய மூன்று எண்ணெய்யால் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் தலைமுடி கொட்டுவது படிப்படியாக நின்று விடும்.
7.அடுத்து முடி உதிர்வை தடுக்க, சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து விடவும் .அதை கொண்டு குளித்து வந்தால் முடி கொட்டுவது குறையும்.
8.அடுத்து ஒரு பாத்திரத்தில் வெந்தயத்தை ஊற வைத்து விடவும் .பிறகு அந்ததண்ணீரை கொண்டு தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
9.அடுத்து தினமும் பாதாம் எண்ணெய்யை தலையில் நன்றாக தேய்த்து வாருங்கள் .இப்படி தேய்த்து வந்தால் முடி உதிர்வு குறையும்.
10.அடுத்து கற்றாழை ஜெல்லை எடுத்து தலையில் தடவி வரவும் .சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.