பனை நுங்கு எத்தனை நோய்களை குணமாக்கும் தெரியுமா ?
பொதுவாக பனை நுங்கு கிராமப்புறத்தில் கிடைக்கும் ஒரு பொருளாகும் .இதை பனை மரத்திலிருந்து வெட்டி எடுப்பார்கள் .இந்த பனை நுங்கு நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது .இந்த பனை நுங்கு மூலம் நம் உடல் பெரும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.விலை மலிவாக கிடைக்கும் பனை நுங்கில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது
2.பனை நுங்கில் ஆரோக்கியம் தரும் வைட்டமின்கள் பி மற்றும் சி, இரும்பு, பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன, .
3.பனை நுங்கில் இயற்கையான குளிர்ச்சி நிறைந்துள்ளது . இது கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருந்து ஆரோக்கியம் கொடுக்கிறது .
4.பனை நுங்கில் உடல் வெப்பம், நீரிழப்பு, வறண்ட சருமம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பல வெப்பம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது .
5.பனை நுங்கு உங்கள் உடலை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், அதிகப்படியான வியர்வையால் இழக்கப்படும் ஊட்டச்சத்துக்களை மீட்டு தருகிறது.
6.பனை நுங்கு உங்கள் தாகத்தைத் தீர்த்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கான ஆற்றலை உங்களுக்கு வழங்குகிறது.
7.பனை நுங்கு கோடைக்காலத்தில் ஏற்படும் உஷ்ணத்தை தணிப்பதற்கு சிறந்த வீட்டு மருந்தாகும்.
8.நுங்கின் சாரை நமது தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவினால், தோல் பிரச்சினை தீரும் .
9.பனை நுங்கு கோடைகாலத்தில் ஏற்படும் வியர்க்குரு மற்றும் அரிப்பு போன்ற தோல் சம்மந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
10.பனை நுங்கு அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. பனை நுங்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.