முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால் எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?
பொதுவாக முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியம் தர கூடியவை .முருங்கை இலை முதல் பூ வரை பல நோய்களை குணமாக்கும் ,இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக முருங்கை கீரையை பொரியல் அல்லது சூப் செய்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்,
2.முருங்கை கீரை சாப்பிட மலச்சிக்கலைப் போக்கும், இளநரையைப் போக்கும், கண் பார்வைத் திறனை அதிகரிக்கும்,
3.முருங்கை கீரை சாப்பிட்டால் முடி உதிர்தலை தடுக்கும், ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும்.
4. அடுத்து முருங்கைப் பூவை கஷாயம் செய்து குடித்து வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்,
5.முருங்கைப் பூ கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்,
6.முருங்கைப் பூ நினைவாற்றலை அதிகரிக்கும், நரம்புத் தளர்ச்சி நீங்கும், நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
7.முருங்கை காயை சாப்பிட்டால் காயிலிருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மலச்சிக்கல், வயிற்றுப் புண்,போன்ற நோய்களை குணமாக்கும்
8.முருங்கை காயை சாப்பிட்டால் கண் சம்பந்தமான நோய்கள் மற்றும் மூட்டு வலியை குணமாக்கும், எலும்பு மற்றும் சிறுநீரகத்தை பலப்படுத்தும், தாது உற்பத்தி அதிகரிக்கும்.
9. முருங்கை விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய் வாதம், முடக்கு வாதம், இளம்பிள்ளை வாதம் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது.
10. அடுத்து முருங்கை பிசினை நல்லெண்ணையில் கலந்து இரண்டு சொட்டு காதில் விட காது வலி நீங்கும்.
11. முருங்கை வேரின் சாறுடன் பால் சேர்த்து சிறிதளவு குடித்து வந்தால் ஆஸ்துமா, வாதம், முதுகு வலி போன்றவை நீங்கும்.