×

மருதாணி இலையை அரைத்து பூச  எந்த நோய் பறந்து போகும் தெரியுமா ?

 

பொதுவாக நம் உடலில் அவ்வப்போது சின்ன சின்ன உபாதைகளுக்கு   நம் முன்னோர் இதற்கு சில வீட்டு வைத்தியங்களை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே கூறி விட்டு சென்றுள்ளனர் ,அந்த வகையில் சில இயற்கை வைத்திய முறைகளை பார்க்கலாம் 
.
1.எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
2.சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
3.மருதாணி இலையை அரைத்து பூச சேற்று புண் குணமாகும்.
4.நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட சீதபேதி தீரும்.
5.நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
6.சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூச வேர்க்குரு குணமாகும் .
7.வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து நெருப்பு சுட்ட புண் ஆறும்.
8.கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து, அதனை அரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
9.கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
10.வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.