×

புற்றுநோய் கட்டிகளை வராமல்  தடுக்க எந்த ஜூஸ் குடிக்கணும் தெரியுமா ?

 

பொதுவாக பழ சாறுகள் நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .அதிலும் மாதுளை பழ ஜூஸில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .
இதில் உள்ள எலாகிடானின்கள் பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பதிவில் மாதுளை மூலம் குணமாகும் நோய்கள் பற்றி நாம் அறியலாம் 

1.சிலருக்கு கேன்சர் அச்சமிருக்கும் .மாதுளை ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் பல்வேறு வகையான புற்று நோய்கள் புற்றுநோய் கட்டிகளை வராமல் தடுக்கும். 
2.காரணம் மாதுளை பழ ஜூஸில் இருக்கக்கூடிய கூறுகள் புற்றுநோய் செல்கள் உற்பத்தியை முடக்கி கேன்சர் வராமல் காக்கும் .
3.மேலும் மாதுளை மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
4. தொடர்ந்து மாதுளை ஜூஸை குடித்து வரும் பொழுது அது முதிய வயதில் வரும் அல்சைமர் நோய் பிரச்சனையை குறைக்கும். 
5.சிலர்  உடல் எடை குறைக்க முயற்சிப்பர் .உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது மாதுளை ஜூஸ். 
6.மாதுளை ஜூஸ் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 7.அதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாதுளை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் சர்க்கரை சேர்க்காமல் எடுத்து கொள்வது நலம் 
8.மேலும் மாதுளை ஜூஸ் குடிப்பது பெருங்குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது .
9. மாதுளை சாற்றில் உள்ள டானின்கள், எலாஜிக் அமிலம் மற்றும் புனிகலஜின் ஆகியவை பெருங்குடல் செல்களில் ஆன்டிபுரோலிஃபெரேடிவ் விளைவுகளைக் கொண்டுள்ளன. 
10.அதுமட்டுமல்லாமல் நுரையீரல் புற்றுநோயை தடுப்பதில் மாதுளை ஜூஸ் முக்கிய பங்கு வகிப்பதால் இதை நிறைய குடிக்கலாம் .