×

லெமனில் உள்ள வைட்டமின் மூலம்  என்ன நன்மைன்னு தெரிஞ்சிக்கோங்க.. 

 

பொதுவாக எலுமிச்சை பழத்தில் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அது பித்தம் சூடு போன்றவற்றை குறைக்கும் ஆற்றல் கொண்டது .அதை லெமன் ரைஸ் மற்றும் லெமன் ஜூஸ் போன்று தயாரித்து சாப்பிட நமக்கு நன்மைகளை கொடுக்கும் அந்த வகையில் லெமன் மூலம் கிடைக்கும் நன்மை தீமைகளை பாக்கலாம் 

1.பொதுவாக எலுமிச்சம் பழச்சாற்றை சூடான உணவில் சேர்த்துச் சாப்பிடுவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சொல்கிறார்கள். அப்படி என்ன ஆபத்துகள் நம்முடைய உடலுக்கு ஏற்படும் பார்ப்போம்
2.எந்த ஒரு சிட்ரஸ் பழத்திலும் காணப்படும் வைட்டமின் சி சூடான உணவில் சேர்க்கப்படும் பொழுது வைட்டமின் சி முற்றிலும் அழிக்கப்பட்டு நம் ஆரோக்கிய பலன் கிடைக்காது  
3.அதுமட்டுமில்லாமல் இப்படி சூடான உணவில் சாப்பிடுவது வைட்டமின் சி எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என உணவு வல்லுனர்கள் சொல்கிறார்கள்.
4.லெமனில் உள்ள வைட்டமின் சி நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. 
5.லெமனில் உள்ள வைட்டமின் சி தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. 
6.ஆனால் சூடான உணவுடன் சேர்த்து சாப்பிடும்பொழுது இந்த நன்மைகள் நமக்கு கிடைப்பதில்லை.
7.எலுமிச்சம் பழத்தை நாம் பயன்படுத்தும் பொழுது உயர்ந்த வெப்ப நிலையில் இல்லாமல் சாதாரண வெப்பநிலையில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். 
8.நாம் உண்ணும் உணவுகளில் எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்து பயன்படுத்துவதற்கு முன்னர் அந்த உணவை ஆற வைக்க வேண்டும்.
9.சூடு ஆறிய பிறகு உணவில் எலுமிச்சை சாற்றை சேர்த்து நாம் பயன்படுத்தும் பொழுது அதிக ஆரோக்கிய நன்மைகள் நம்முடைய உடலுக்கு கிடைக்க செய்து நம் நலன் காக்கும்