×

அடிக்கடி உணவில் கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டு சேர்த்து கொண்டால் என்ன நேரும் தெரியுமா ?

 

பொதுவாக வெள்ளை சர்க்கரை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு தீமைகள் உண்டாகிறது .இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக இப்போது வெல்லம் அல்லது கருப்பட்டியை சேர்த்து கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது .இந்த கருப்பட்டியில் பல நன்மைகள் உள்ளன .உதாரணமாக   
கருப்பட்டியை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் ஈரப்பதம் இருப்பதோடு சருமம் பளபளப்பு அதிகரித்து, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
1.பொதுவா கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம்,நம் உடலில் உள்ள  நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. 
2.மேலும் கருப்பட்டி சாப்பிடுவதால் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.
3.அடிக்கடி உணவில் கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டு சேர்த்து கொண்டால் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. 
4.அடிக்கடி உணவில் கருப்பட்டி சேர்த்து வந்தால்  இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். 
5.கருப்பட்டியில் உள்ள  உள்ள ‘கிளைசீமி இன்டெக்ஸ்’ உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.
6. ஆரோக்கியம் மிக்க கருப்பட்டியில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இது ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். 
7.பொதுவாக உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தான், இரத்த சோகை பிரச்சனை ஏற்படும். 
8.எனவே இரத்த சோகை ஏற்படாமல் இருக்க, கருப்பட்டியை அன்றாட உணவில் சேர்த்தால் இரத்த சோகை ஏற்படாது.
9.கருப்பட்டியில் கெமிக்கல் ஏதும் கலக்கப்படாமல் தயாரிப்பதால், இது மிகவும் ஆரோக்கியமானது. 
10.வயதாகும்போது பெரும்பாலானோருக்கு தோலில் சுருக்கங்கள் வருவதோடு பளபளப்பும் குறைகிறது.இதை கருப்பட்டி தடுக்கும்