×

வெதுவெதுப்பான நீருடன் கருஞ்சீரகத்தை கலந்து அருந்துவது எந்த நோயை தடுக்கும் தெரியுமா ?

 

பொதுவாக கருஞ்சீரகம் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்குகிறது .இந்த கருஞ்சீரகம் மூலம் நாம் பல்வேறு பலன்களை அடையலாம் .உதாரணமாக 
முகப்பருக்கள் நீங்கவும் கருஞ்சீரகம் உதவுகிறது. எனவே ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தையும், முடியையும் பெற கருஞ்சீரகத்தை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி கருஞ்சீரக எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவது நல்லது.மேலும் கருஞ்சீரகத்தின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம் 


1. உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் எடையை குறைக்க கருஞ்சீரகத்தை சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும். 
2.உடல் எடை குறைக்க வெதுவெதுப்பான நீருடன் கருஞ்சீரகத்தை கலந்து அருந்துவது சிறப்பு.
3.மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க கருஞ்சீரகம் மிகவும் உதவக்கூடியது. 
4.மேலும்  இதய நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்துக்கொள்ளவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் கருஞ்சீரகம் உதவும்.
5. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கருஞ்சீரகத்தை காலையில் வெறும் வயிற்றில் கருப்பு தேநீருடன் கலந்து அருந்தினால் சுகர் குறையும் .
6.கருஞ்சீரகம்  புற்று நோய் நம்மை நெருங்காமல் பாதுகாத்துக் கொள்ள மிகவும் உதவக் கூடியதாக உள்ளது. 7.குறிப்பாக மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கணையப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றில் இருந்து கருஞ்சீரகம் நம்மை காக்கும் .
8.சிலர் உயர் ரத்த அழுத்தத்தால் அவதி படுவர்.இப்படி  அவதிப்படும் நபர்களுக்கு கருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்தாக திகழ்கிறது.
9. வெதுவெதுப்பான நீரில் கருஞ்சீரக எண்ணெய்யை தேனுடன் கலந்து அருந்துவது ஆஸ்துமா நோயிலிருந்து விடுபட உதவும்.
10.கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உங்களின் முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியத்துடனும், பொலிவுடனும் வைத்துக் கொள்ள மிகவும் உதவுகிறது. மேலும் .