கடுகு எண்ணெயால் பாதங்களை கழுவ எந்த நோய் குணமாகும் தெரியுமா ?
பொதுவாக நம் பாதங்களை செகண்ட் ஹார்ட் என்று கூறுவார்கள் .அந்த பாதத்தில் பல அக்குபஞ்சர் புள்ளிகள் இருக்கின்றன .அது மட்டுமல்லாமல் பல நரம்புகளின் முடிச்சு அங்குதான் இருக்கின்றன .இந்த பாதங்களில் உண்டாகும் வெடிப்பை எப்படி குணமாக்கலாம் என்று இந்த பதிவில் பாக்கலாம்
1.எலுமிச்சை பழத் தோலால் பாதங்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.
2.இப்படி எலுமிச்சை பழத் தோலால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தைச் சுத்தமாக்கலாம் . மேலும் எலுமிச்சை பழத் தோலால் இப்படி செய்வது கிருமிகளையும் ஒழிக்கும்.
3.அடுத்து சிலருக்கு பாத வெடிப்பு இருக்கும் .அவர்கள் தினமும் இரவு தூங்கும் போது, கடுகு எண்ணெயை பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் தடவி வாருங்கள்
4.இப்படி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு பிரச்சனை சரியாகும்.
5.அடுத்து பாத வெடிப்புக்கு தேன் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்றாக குழைத்து கொள்ளவும்.
6.பின்பு இந்த கலவையை இரவு தூங்கும் போது கால்களில் போட்டு வந்தால் பாத வெடிப்புகள் மறைந்து விடும்.
7.அடுத்து தினமும் குளிக்கும் போது சொரசொரப்பான கற்களில் உங்கள் கால்களை தேய்த்தாலும் பாதத்தில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும்.
8.அடுத்து பாத வெடிப்புக்கு தேங்காய் எண்ணெய் பயன் படும் .தினமும் இரவு தூங்கும் போது கால்களில் தேங்காய் எண்ணெயை தடவி வந்தாலே கால்களில் உள்ள வெடிப்புகள் சரியாகும்.
9.அடுத்து உருளைக்கிழங்கை காய வைத்து தூளாக்கிகொள்ளவும் . பின் அதை தண்ணீரில் குழைத்து பூசி வந்தாலும் வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதம் மிளிரும்.
10.அடுத்து பாத வெடிப்புக்கு சிறிதளவு வேப்பிலை, சிறிதளவு மருதாணி மற்றும் சிறிதளவு பச்சை மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கொள்வோம்
11.பின்னர் பாத வெடிப்பு உள்ள இடத்தில் அந்த கலவையை போட்டு வர பாத வெடிப்புகள் சரியாகும்.