இலவங்க பட்டையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக நாம் அசைவ உணவுகளில் அதிகம் சேர்க்கும் இலவங்க பட்டையில் நிறைய மருத்துவ குணம் உள்ளது ,அந்த வகையில் வெந்தயம் மற்றும் இலவங்க பட்டையின் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்
1.இலவங்க மரத்தின் தண்டிலிருந்து எடுக்கப்படும் பட்டை நறுமணமும் ஆரோக்கியமும் கொண்டது.
2.இந்த இலவங்க பட்டையில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன.
3.இலவங்க பட்டைக்கு ஆரோக்கியம் தவிர பசியை எடுப்பதை தணிக்கும் இயல்பு உண்டு.
4.இந்த லவங்க பட்டையின் பசியை தடுக்கும் குணம் காரணமாக தேவையற்ற நொறுக்குத்தீனிகள், தின்பண்டபங்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
5.மேலும் கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்பையும் இந்த லவங்க பட்டை தடுக்கிறது.
6.இந்த இலவங்க பட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதால் உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.
7.இலவங்க பட்டை பொடியை உணவில் கலப்பதால், உடலிலுள்ள கொழுப்பை கரைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்
8.அடுத்து ஆரோக்கியம் மிகுந்த வெந்தயத்தில் 45 சதவீதம் நார்ச்சத்து உள்ளது.
9.வெந்தயத்திலுள்ள பெரும்பாலான நார்ச்சத்து கரையாத தன்மை கொண்டது.
10.ஆகவே, கார்போஹைடிரேடு மற்றும் கொழுப்பு ஜீரணமாவதை இது தாமதிக்கிறது.
11.தாமதமான ஜீரணத்தால் அதிக நேரம் வயிற்றில் திருப்தியான உணர்வு காணப்படும். இதன் காரணமாக தேவையற்ற நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
12.வெதுவெதுப்பான நீரை ஒரு தம்ளரில் ஊற்றி, அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் சாப்பிடுவது பல நோய்கள் வருவதை தடுக்கும் .