எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க எந்த நோய் ஓடும் தெரியுமா ?
பொதுவாக அந்த காலத்து பாட்டிகள் , துல்லியமாக ஒவ்வொரு நோய்க்கும் நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே குணப்படுத்தும் முறைகளை கண்டு ப்பிடித்து தந்துள்ளனர்.அந்த வகையில் சில வீட்டு வைத்திய முறைகளை பற்றி பார்க்கலாம்
1.இலவங்கப்பட்டையுடன் வால்மிளகு பொடித்து 3 வேளை நெய்யில் கலந்து சாப்பிட இருமல் தீரும்.
2.ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
3.எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
4.சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
5.மருதாணி இலையை அரைத்து பூச சேற்று புண் குணமாகும்.
6.நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட சீதபேதி தீரும்.
7.நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
8.சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூச வேர்க்குரு நீங்கும் .
9.வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து, மேற்பூச்சாக பூச நெருப்பு சுட்ட புண்ணின் எரிச்சல் தணிந்து ஆறும்.