பச்சை பயறு அதிகம் உண்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா ?
பொதுவாக பச்சை பயறு நம் உடலில் உண்டாகும் செரிமான கோளாறு ,ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் கோளாறுகளுக்கு இதை சாப்பிடலாம் .மேலும் இதன் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பச்சை பயறு அதிகம் சாப்பிடுவதால் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்
2.ரத்த ஓட்டத்துக்கும்,பச்சை பயறு வழி செய்கிறது
3.மேலும் வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் ஏற்றது பச்சைப் பயறு.
4.பச்சை பயறு அதிகம் உண்பதால் மலச் சிக்கலைப் போக்கும்.
5.இதில், புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.
6.அது மட்டுமல்லாமல் இதில் மாவுச் சத்து, கொழுப்பு, போன்றவை அடங்கியுள்ளது
7.கோலின், பீட்டா கரோட்டின்,போன்ற சத்துக்களும் பச்சை பயறில் உல்லது
8.ஒரு பிடி பச்சை பயிரில் கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.
9.இதய நோயாளிகள்,பச்சை பயிரை எடுத்து கொள்ளலாம்
10.பச்சை பயறை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
11.பொட்டாஷியம், பாஸ்பரஸ் இந்த பயிரில் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.