திராட்சை தண்ணீரை தினமும் எடுத்துக்கொள்வது என்ன நன்மை தெரியுமா ?
திராட்சை நீரின் நன்மை
திராட்சைகள் காரத்தின் வளமான மூலமாகும், இது உங்கள் உடலில் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
புரதச்சத்து நிறைந்த திராட்சை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
உயர் இரத்த அழுத்தத்துடன் போராடுகிறீர்கள் என்றால், திராட்சை தண்ணீரை தினமும் எடுத்துக்கொள்வது சிறந்தது.
உடம்பில் இரும்புச் சத்தானது குறைவாக இருந்தால், வெறும் வயிற்றில் திராட்சை நீரைப் பருகி, உங்கள் இரும்புச் சத்தை அதிகரித்துக்கொள்ளவும்.
வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிரம்பிய திராட்சை, ஆரோக்கியமான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலை தருகிறது.
திராட்சையும் இன்சுலின் வினைத்திறனை மேம்படுத்துவதோடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
திராட்சை தண்ணீர் தயாரிப்பது எப்படி
200 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
வெந்நீரில் 80-90 கிராம் உலர் திராட்சை சேர்த்து இரவு முழுவதும் ஊற விடவும்.
காலையில், திராட்சையை நீக்கி, மெதுவாக தண்ணீரை சூடாக்கவும்.
பின் காலை உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் இதை குடிக்கவும்.