×

வயிற்றுக்கோளாறு, செரியாமை நீங்க இஞ்சியை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

 

பொதுவாக இஞ்சி நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மையை வாரி வழங்கும் .இந்த இஞ்சியுடன் எந்த பொருளை சேர்த்து சாப்பிட்டால் என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் நாம் பாக்கலாம் 

1.ஆரோக்கியம் தரும் இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் போட்டு ஊறவைத்து தினமும் ஓரிரு துண்டுகள் சாப்பிட்டுவர பித்தம், தலைசுற்றல், உணவு செரியாமை நீங்கும். 
2.மேலும் இஞ்சியை அப்படி சாப்பிட்டு வர  உடல் உறுதி பெறும். ஆயுள் அதிகரிக்கும். முகம் பொலிவு பெறும்.
3.இஞ்சி நம் உடலில் காற்றுப்பாதையில் உள்ள சுருக்கம் ஏற்படுவதை தடுக்கிறது. 
4.இதனால் சுவாச பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுகிறது. சளி மற்றும் தொண்டைபுண் போன்றவற்றில் இருந்து விரைந்து நிவாரணம் பெறலாம்.
5.இஞ்சியில் புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை இருப்பதால் புற்றுநோய்கள் வருவதை தடுக்கிறது. 
6.இஞ்சி பெருங்குடல் வீக்கம், புற்றுநோய் கட்டிகள் மீது செயல்பட்டு அதன் பாதிப்பை குறைத்து நல்ல பலனைத்தருவதாக ஆராய்ச்சியில் நிருபிக்கப்பட்டுள்ளது.
7.இஞ்சியை இடித்து மோரில் கலந்து அதில் துளசி சாறு சிறிதளவு சேர்த்து கொள்வோம் 
8.மேற்சொன்ன வாறு ஒரு ஸ்பூன் வீதம் தினமும் ஒரு வாரம் சாப்பிட்டுவர வாய்வுத்தொல்லை நீங்கும்.
9.அடுத்து சீரகம், கருவேப்பிலை, இஞ்சி இவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொள்வோம் 
10.மேலே சொன்ன வாறு வடிகட்டி சாப்பிட்ட வயிற்றுக்கோளாறு, செரியாமை நீங்கும்.