வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை தெரியுமா ?
பொதுவாக நம்முடைய அன்றாட வாழ்வில் ஒரு சில உணவுப்பொருட்களை சேர்த்துக் கொண்டே வந்தால் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.அது எந்த உணவுகள் என்றும் அவற்றால் என்ன பயன்கள் என்றும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்
1.சின்ன வெங்காயம் மூலம் , வாய் புண் மற்றும் கண்வலி போன்ற நோய்கள் குணமாகும். மேலும் வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
2.பச்சை வெங்காயத்தை தொடர்ந்து உண்பதால், இரும்புச்சத்து உடலுக்கு அதிகளவில் கிடைக்கும்.
3.சின்ன வெங்காயம் மூலம் இரத்த சோகை நோய்கள், தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் போன்றவை குணமாகும், இதய நோய் உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்லது
4.அடுத்து பூண்டு சாப்பிடுபவர்களுக்கு சளித்தொல்லை நீங்கும், மேலும் பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
5.மேலும் பூண்டை தொடர்ந்து உண்பதால் நம் உடலில் ரத்த அழுத்தம் குறைந்து ஆரோக்கியம் மேம்படும்
6.மேலும் பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன. மேலும் தொற்று நோய்கள் வராமலிருக்க உதவிகிறது.
7.அடுத்து கறிவேப்பிலை பற்றி பார்க்கலாம் .காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கும்.
8.மேலும் கறிவேப்பிலை உண்பது இரத்தத்தின் சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதய நோய் வராமல் பாதுகாக்கிறது, செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது
9.அடுத்து வெந்தயம் பற்றி பார்க்கலாம்
வயிற்று கோளாறுகளுக்கு வெந்தயம் சிறந்த மருந்தாக விளங்குகிறது, மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது.
10.சர்க்கரை,ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது