×

ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை எந்தெந்த நோயை தடுக்கும்னு  தெரிஞ்சிக்கோங்க 

 

பொதுவாக ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பித்த அமிலங்களை பிணைக்கவும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.இந்த ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம் 

1.பொதுவாக கருப்புக் கொண்டக்கடலையில் சுவை மட்டுமல்ல, இரும்புச் சத்து உட்பட உடலுக்கு தேவையான பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
2.ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில்   நிறைந்துள்ள இரும்பு சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நல்லது. 
3.காலையில் எழுந்தவுடன் ஒரு கைப்பிடி அளவு ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிட்டால் நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்படலாம். 
4.மேலும் ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.
5.ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. 
6.மேலும் ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கிறது.
7.ஊறவைத்த கொண்டைக்கடலையில் , இரத்த கட்டிகள் உருவாவதை தடுக்கவும் உதவுகிறது.
8.ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலை உடல் எடையை பராமரிக்க முடியும்
9.. தினமும் காலையில் ஊறவைத்த கருப்பு கொண்டக்கடலையை சாப்பிட்டு வர உடலின் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
10. கருப்பு கொண்டைக்கடலை மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை பெருமளவு குறைபதாக கண்டறியப்பட்டுள்ளது .