கெட்டகொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் இப்பருப்பு
பொதுவாக பருப்பு வகைகளில் நம் உடலுக்கு தேவையான ப்ரோட்டின் அதிக அளவு உள்ளது .இதில் பாதாம் பருப்பை நாம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்கிறது .
பாதாமை அப்படியே சாப்பிடுவதை காட்டிலும், நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மை உண்டு . பாதாமிலிருந்து லிபேஸ் என்கிற நொதி வெளி விடப்படுகிறது. இதனை உண்ணும்போது, நாம் சாப்பிட்ட மற்ற உணவுகள் எளிதில் செரிக்கின்றன.இந்த பதிவில் பாதாம் மூலம் நாம் என்ன பயன்களை அடையலாம் என்று பார்க்கலாம்
1.. கெட்டகொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் குணம் ஊறவைத்த பாதாமுக்கு உண்டு.
2.பாதாம் பருப்பு நமது உடல்நலத்துக்கு,நல்லது செய்யும் குறிப்பாக இதயத்துக்கு நல்லது.
3.ஊறவைத்த பாதாமைச் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்,
4.இதேபோல் ஊறவைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும்.
5.பாதாமில் உள்ள கொழுப்புகள் வயிற்றை நிரப்பிவிடுவதால், நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடமாட்டோம், இதனால் உடல் எடை (Weight) குறையும்.
6.கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் போதுமான அளவு கிடைக்கும்போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது, பிறப்புக் குறைபாடுகள் குறைகின்றன.
7.கர்ப்பிணி பெண்களுக்கு ஃபோலிக் அமிலத்தை ஊறவைத்த பாதாம் வழங்குகிறது.
8.இவற்றுடன், ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்களால் நமக்கு இளமைத்தோற்றம் கிடைக்கும்,
9.மேலும் பாதாமிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது
10.பாதாம் பருப்புகளை அதிகம் உண்பதால் அதிலிருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் இருக்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரித்து விடும் .இதனால் ஜுரம், வைரஸ் தொற்று போன்றவற்றிலிருந்து நம்மை காக்கிறது.