உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் இந்த பருப்பு
பொதுவாக பாதாம் பருப்பு நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது .தினந்தோறும் இருபது முதல் இருபத்தைந்து பாதாம் வரையில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாள் இரவு முழுவதும் பாதாமை ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் சாப்பிடலாம். இதன் மூலம் மிகவும் குறைந்த கலோரியில் அதிகளவில் ஊட்டச் சத்துக்களும், பசியை கட்டுப்படுத்தும் நார்ச் சத்துக்களும் அதிகமாக கிடைக்கிறது. ஆகையால், இந்த பாதாம் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பாதாம் பருப்பு உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் ,
2.இப்படி கொழுப்பை கரைக்கும் தன்மை நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பிற்கே அதிகமாக உள்ளது.
3.ஆரோக்கியமான பாதாம்பருப்பை, நீரில் ஊறவிடும்போது, “லிபேஸ்” என்ற ஒருவகை நொதி, அதில் உருவாகிறது.
4.பாதாமில் உள்ள இந்த லிபேஸ் நொதி, நமதுடலில், செரிமானத்திறனை மேம்படுத்துகிறது.
5.மேலும் நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பை உட்கொள்ளும்போது, “ஆல்பா டோகோபெரால்” என்ற ஒருவகை நுண்சத்து, நமது இரத்தத்தில் உருவாகி நம்மை காக்கிறது .
6. இந்த பாதாம் , இரத்த அழுத்தத்தைச் சீரானநிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.
7.மேலும் நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பை உட்கொள்வதால், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும்.
8.மேலும் கர்ப்பமாய் இருக்கும் கற்பிணிப் பெண்களுக்கு கருவளர்ச்சிக்கு ஃபோலிக்சத்து அவசியம் தேவை.
9.இந்த நீரில் ஊறவைத்த பாதாம்பருப்பில், அதிகஅளவு ஃபோலிக்சத்து இருக்கிறது
10.இந்த பாதாம் மூலம் ஏற்கனவே உடலில் தேங்கி இருக்கும் கொழுப்புகள், ஆற்றலாக மாற்றப்பட்டு கலோரிகள் எரிக்கப்படுவதால் , வேகமாக நம்முடைய உடல் எடையை குறைக்க முடியும்.