×

அக்ரூட் பருப்புகளை ஊற வைத்து சாப்பிட எந்த நோயை வெல்லலாம் தெரியுமா ?

 

அக்ரூட் பருப்புகள் (Walnuts) என்பது வால்நட் மரத்திலிருந்து வளரும் வட்டமான, ஒற்றை விதை கல் பழங்கள். அவை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். அவை இதயம் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, எடை குறைக்க உதவுகிறது.இந்த அக்ரூட் பருப்பின் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.அக்ரூட் பருப்புகளை ஊற வைத்து சாப்பிட வேண்டும் .ஏனெனில் அதை ஊற வைக்கும்போது அக்ரூட் பருப்பின் சருமத்திலுள்ள டானின்கள் எனப்படும் ஒரு கலவையை நீக்கப்படும் . 
2.இந்த டானின்கள் நமது உடலில் குளுக்கோஸ் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைத்தல் போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தடுக்கும் .. 
3.ஆனால் பச்சை அக்ரூட் பருப்புகள் அல்லது எந்த ஒரு விதைகளிலும் உள்ள டானின்கள் , ஊட்டச்சத்து எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. 
4.மேலும் இது இரும்பு சத்து  போன்ற சில ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கவும் உதவுகிறது. 
5.இந்த அக்ரூட் பருப்புகளை ஊற வைப்பதன் மூலம் அதன் சருமத்தில் இருக்கும் அழுக்கு, தூசி மற்றும் எச்சங்களை நீக்க உதவுகிறது. 
6.அக்ரூட் பருப்புகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், எலாஜிக் அமிலம்,அதிகம் நிறைந்துள்ளது  
7.மேலும் அக்ரூட் பருப்பில் ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் ஈ, போன்ற சத்துக்களும் நிரைந்துள்ளது 
8.மேலும் அக்ரூட் பருப்பில் மெலடோனின், டோகோபெரோல், செலினியம் மற்றும் அந்தோசயின்கள் போன்றவை நிரம்பியுள்ளது . 
9.மேலே குறிப்பிட்டுள்ள கலவைகள் நீரிழிவு நோயைக் குறைக்க உதவும்  
10.அது மட்டுமல்லாமல்  நீரிழிவு நோயாளிகளில் குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க நமக்கு இந்த கலவைகள் உதவுகிறது..