×

ஆரோக்கியமான அகத்திக்கீரை எந்த நோயை குணமாக்கும் தெரியுமா ?

 

பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் .பல நோய்கள் நம் உடலை அண்டாமல் பாதுகாக்கும் ஆற்றல் கொண்டது .அந்த வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட கீரை வகைகளில் சில முக்கியமான கீரைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 

1.பொதுவாக கீரைகளில் அதிக இரும்புச்சத்து கொண்ட கீரை, முருங்கைக் கீரையாகும்.
2.இந்த ஆரோக்கியமான முருங்கைக் கீரையை  உணவில் சேர்த்து வந்தால் கண்கள் மற்றும் உடல் பலம் பெறும்.
3.அடுத்து  மருத்துவமிக்க கரிசலாங்கண்ணி கீரை, சளி மற்றும் இருமலை குணமாக்கப்பயன்படுகிறது.
4.அடுத்து ஆரோக்கியமான அரை கீரை பற்றி பார்ப்போம் .திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்கள், அரைக்கீரையினை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்து உண்டு வந்தால், கருப்பை பலப்படும்.குழந்தை தங்கும்.
5.அதேபோல், ஆண்களுக்கும்  அரைக்கீரை ஆண்மைக்குறைவினைப் போக்கும் தன்மை கொண்டது.
6.அடுத்து ஆரோக்கியமான குப்பைக்கீரையில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாவுச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளது.
7.சிலருக்கு உடலில் வரும் புண்கள் ஆறாமல் பல நாட்கள் இருக்கும். அத்தகைய புண்கள் ஆறுவதற்கு, வைட்டமின் சி நிறைந்துள்ள குப்பைக்கீரையினை உண்டால் விரைவில் சரியாகும். காயம் ஆறும்.
8.அடுத்து ஆரோக்கியமான அகத்திக்கீரை உடலுக்கு குளிர்ச்சியைத் தரவல்லவை. 
9.ஆரோக்கியமான அகத்திக்கீரையில் அதிகளவு இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், அதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நலம் சேர்க்கும் 
10.மேலும், ஆரோக்கியமான அகத்திக்கீரை எளிதில் வயிற்றுப் புண்ணை ஆற்றும்.