தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது எந்த நோய்கள் வராமல் தடுக்கும் தெரியுமா ?
பொதுவாக உடலில் தண்ணீர் மிகவும் முக்கியமானது.ஆனால் பலர் அலுவலக வேலை காரணமாகவும் ,அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வருமே என்று எண்ணியும் குறைவாக தண்ணீர் குடித்து தங்களின் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வர் .அதனால் அதிகம் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1. சிலர் தண்ணீர் குறைவாக குடிப்பர் .ஆனால் மூட்டுகளுக்கு அருகில் உள்ள குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு அதிகம் தண்ணீர் மிகவும் அவசியம்.
2. சிலருக்கு மூட்டு வலி இருக்கும் ,உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், தண்ணீரை அதிகம் குடியுங்கள்.
3.சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும் .தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
4. இதயம் பிரச்சினை வர கூடாது என்று நினைப்போர் தூங்கும் முன் சிறிது தண்ணீர் குடிப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறையும் .
5.சிலர் சோடா அல்லது குளிர் பானங்கள், காப்ஃபைன் அதிகம் குடிப்பர் .இதற்கு பதில் தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், உடலின் ஆற்றல் சிறப்பாக இருக்கும்.
6.சிலர் சரும ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுப்பர் .தினமும் போதிய அளவில் தண்ணீரைக் குடித்து, வந்தால் சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் நீண்ட நாட்கள் இருக்கும்.
7.சிலர் உடலில் டாக்சின்கள் இருக்கும் .தண்ணீரைக் குடிக்கும் போது உடலுறுப்புக்களில் உள்ள டாக்ஸின்கள் மற்றும் அழுக்குகள் வெளியேற்றப்படும்
8. சிலர் எடை குறைய முயற்சிப்பர் .உணவு உண்பதற்கு முன் சிறிது தண்ணீர் குடித்துவிட்டு உண்டால், உண்ணும் உணவின் அளவைக் குறைத்து எடையையும் குறைக்கலாம்.